Saturday, October 04, 2008

சரோஜா

சென்னை 28 டீம், காமெடியா இருக்கும்னு போனா காமெடி த்ரில்லர் நல்ல விருந்து.

இந்த படத்தை பற்றி விவரிக்கத்தேவை இல்லை. சில கருத்துக்களை மட்டும் இங்கு வைக்கிறேன்.

"யார் இந்த லேடீஸ்", "இந்த Train சென்னைக்குப் போகாதா?", "அண்ணனும் தம்பியும் ஆந்திரா meals சாப்பிட தான் லாயக்கு", "இந்த மொக்க game-அ போய் எப்படி தான் விளையாடுறானோ?" - இந்த மாதிரி வசனங்கள் சரியான கிச்சு கிச்சு.

ஒளிப்பதிவு பல இடங்களில் தேறி இருந்தாலும் camera வை நிறைய இடங்களில் ஆட்டு ஆட்டு என்று ஆட்டியிருப்பது எரிச்சலூட்டுகின்றது. BGM அருமை. அந்த முதல் intro பாடல் தேவை இல்லாத ஆரம்பம். நிகிதா நல்ல நடிப்பு, வேகா அருமையான அழகு.

சிவா நடிப்பில் பின்னுகிறார். சரண்-ஐ தமிழ் சினிமா இன்னும் நல்லா use பண்ணிக்கனும்னு நிரூபித்திருக்கிறார். ப்ரேம்ஜி-க்கும் நல்ல எதிர்காலம் இருக்கு.

சென்னை 28 பார்க்காம பார்த்தால் சில காட்சிகள் புரியாது

தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல புதிய முயற்சி.
Hats-off to வெங்கட் பிரபு & Team.

Sunday, September 21, 2008

தாம் தூம்

தாம் தூம்...

மறைந்த ஜீவாவின் தீவிர ரசிகர்கள் கண்டிப்பாக ஏமாற்றமடைந்திருப்பார்கள்.

பாடல்கள் தந்த ஒரு Hype-ல் போய் படம் பார்த்தால்.... ஹூம்ம்ம்....

படம் ரஷ்யா, சென்னை, கிராமம் என்று பல இடங்களை காட்டுகிறது. படத்தின் முதல் அரை மணி நேரமே எப்படா படம் முடியும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. வரிசையாக அத்தனை பாடல்கள். கதை ரஷ்யாவில் தொடரும்போது ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கினாலும் ஏமற்றம் தான் கடைசியில். ரஷ்ய MODEL... DOCTOR CONFERENCE... என்னென்னவோ வருகிறது. ஒன்றுமே படத்தை தூக்கி நிறுத்தவில்லை.

படத்தில் குறிப்பிடும்படி இருப்பவை ஒளிப்பதிவும் இசையும் தான். ஜீவா தன் முத்திரையை பதித்துவிட்டார். ரஷ்யா இன்னும் கண்களில் நிற்கிறது. அது மட்டும் இல்லை. கங்கனா நீரோடையோரம் உட்கார்ந்திருக்கும் அந்த Shot ம் அவர் திறமையின் பதிப்புகள். ஹாரிஸ் பிண்ணியிருக்கிறார், பாடல்களும் சரி... பின்னணியும் சரி.

கங்கனா மற்றும் லட்சுமி ராயின் தேர்வு அருமை. அருமையான கதைக்கரு. ஆனால் நீளமான காட்சிகளும் மோசமான editing உம் சேர்ந்து கதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டன.