பழைய படங்களில் வருகிற மாதிரி காலில் இருந்து காமிரா ஆரம்பமாகி... மக்கள் அலையை காண்பித்து... ரஜினிக்கு 'Intro' கொடுக்கின்ற மாதிரி ஆரம்பமாகின்றது கதை. ரஜினிக்கு இருக்கின்ற 'இமேஜ்'ற்கு இந்த Intro ஈடுகொடுக்கவில்லை தான். 'அமெரிக்கன் ரிட்டர்ன்' ஆகும் ஒரு Software Engineer என்று ஆரம்பமாகும் ஒரு கதைக்களம் தமிழில் இதுவரை யாரும் எடுக்காத கதைக்களம் போல இருந்தாலும் கதையை நம்பாமல் ரஜினியை நம்பி படம் நகர்கிறது.
ரஜினியையும் அவரது வீட்டையும் காண்பிக்கும்போதே தெரிந்து விடுகிறது, சீக்கிரமே அவர் ஏழையாகி மறுபடியும் பணக்காரர் ஆவதுதான் கதை என்று. ஷங்கரின் படம் என்பதை மறக்கும் அளவிற்கு கதை நகர்கிறது முதல் பாதியில். விவேக் காமெடி அவ்வப்போது சிரிப்பைத் தந்தாலும் படத்தை அது கொஞ்சம் கூடத் தூக்கி நிறுத்தவில்லை. ரஜினி ஷ்ரேயா வீட்டிற்கு போகும்போது 'வாங்க பழகலாம்' என்ற ஒரு காமெடி ட்ராக் பண்ணியிருக்கிறார்கள். முதல் முறை அது சிரிப்பைத் தந்தாலும், மறுபடி மறுபடி அந்த காட்சி வருவது எரிச்சலூட்டுகிறது. பெண்ணைப்பார்க்க வீட்டிற்கு மாறுவேடத்தில் செல்வதெல்லம் அரதப்பழசான யுக்தி. அதுவும் அவர்களை உள்ளே வைத்துப் பூட்டுவது ஏற்கனவே 'சாமி' படத்தில் வந்த காட்சி தான். இப்படி முதல் பாதியில் 2 3 படங்களின் சாயல் இருந்தது உண்மையே. ரஜினியை கல்யாணம் செய்ய முடியாததற்கு ஷ்ரேயா சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளா முடியாத ஒன்றாக் உள்ளது.
'சகானா...' பாடல் செட்டெல்லாம் அருமையிலும் அருமை. தமிழ் படம் பார்பதுபோலவே இல்லை பாடல்களை பார்க்கும்போது மட்டும். அவ்வளவு பிரம்மாண்டம். ஆனாலும் இந்த பிரம்மாண்டம் கதைக்குத் தேவைப் படவில்லை தான், 'அதிரடி...' பாடல் நல்ல ரசிகர் விருந்து. 'பல்லேலக்கா...' பாடல் காட்சி அமைப்பு ஏனோ முதல்வன் பட பாடல் ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களில் பின்னியிருக்கிறார். BG யிலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருந்தாலும் Excellent என்று சொல்ல ஒன்று கூட இல்லை.
காமிரா அருமை. அதுவும் ரஜினியை அவ்வளவு இளமையாகக் காட்ட முடியும் என்பதிலிருந்து தமிழ் சினிமா இன்னொரு அடி எடுத்து வைத்திருப்பதை உணர முடிகிறது.
கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். நிறைய Homework பண்ணி இருக்கிற ஷங்கர் அதை திரையில் அசலாகக் கொண்டு வரவில்லை. காலேஜ் ஆரம்பிக்க என்ன என்ன வேண்டும், எங்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும் என்கிற விசயங்களை நன்றாக Research பண்ணி இருகிறார். அந்த காட்சிகளில் மட்டும் ஷங்கர் தேறுகிறார். 'ஸ்ரேயா'விற்கு நடிக்கக் கிடைத்த இடங்களில் நன்றாகப் பண்ணியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி கொஞ்ஞம் தூக்கல் தான் மேடம்.
சண்டைக் காட்சிகளில் ரஜினி அசகாய சூரர் போல 10 - 20 பேரை சாதாரணமாக அடித்து உதைக்கிறார். அதுவும் குழந்தைகள் கூட பொறுத்துக்கொள்ள முடியாத அளவு ஹீரோயிசம் சண்டைக் காட்சிகளில்.
கறுப்புப் பணம் என்கிற புது களம் கண்ட ஷங்கர் திரைக்கதையில் சொதப்பி விட்டார். கறுப்புப் பணத்தின் மூலம் என்ன, அது எப்படி வெள்ளைப் பணமாக வெளியே வருகிறது போன்ற விஷயங்களை திரைக்கதையில் சேர்த்திருந்தால் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமைந்திருக்கும். அதுவும் சில இடங்களில் அந்தக் காட்சிகள் 30 வினாடிகள் கூட இடம்பெறவில்லை. படம் பார்க்கும் பாமர மக்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் விளங்கியிருக்க வாய்ப்புகளே இல்லை. அதுவும் இந்த Laptop - Biometrics காட்சிகள் நம் அடித்தட்டு மக்களுக்கு 'அலிபாபாவும் 40 திருடர்களும்' ஜாலம் போன்றதுதான்.
Climax-ல் ரஜினியைப் பிழைக்க வைப்பதுதான் இருப்பதிலேயே உச்சம். எல்லோர் காதிலும் பூ. Climax மொட்ட பாஸ் ரஜினி சண்டைக் காட்சியின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.
ரஜினியின் நடிப்பு ரொம்பவே மெருகேறி இருக்கிறது. 'அதிரடி...' பாடலுக்கு முன்னால் MGR மாதிரி பண்ணுவது அட்டகாசம். படத்தை கடைசி வரை தன் தோளில் தான் சுமந்து செல்கிறார் ரஜினி.
மொத்தத்தில் 'சிவாஜி, The Boss', ரஜினி புண்ணியத்தில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறது!!!
Thursday, November 29, 2007
சிவாஜி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment